சனி, 22 பிப்ரவரி, 2014

அப்பிளின் மிகப்பெரிய திரைகொண்ட iPad அறிமுகம்

அப்பிள் நிறுவனமானது 12.9 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட iPad சாதனத்தை இந்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளது.

iPad வரிசையில் மூன்றாம் தலைமுறை சாதனமாக வெளிவரவுள்ள இது Touch ID தொழில்நுட்பத்தினையும் A8 Processor இனையும் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தகவல்களை அப்பிள் செய்திகளை உறுதிப்படுத்தி வௌயிட்டு வரும் Ming-chi Kuo என்பவர் கசிய விட்டுள்ளார்.

இதேவேளை iPad விற்பனையானது 2013ம் ஆண்டின் முதல் காற்பகுதியில் 34 மில்லியனிலிருந்ததுடன் 2014 முதல் காற்பகுதியில் 30 மில்லியனாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக