சனி, 11 ஜனவரி, 2020

சாம்சங் கேலக்ஸியின் அடுத்த ஸ்மார்ட்போன்

Samsung Galaxy S11 Plus or Galaxy S20 Ultra? New leak hints at latter : சாம்சங் கேலக்ஸி சீரிஸின் அடுத்த ஸ்மார்ட்போன் என்ன என்று பரவலாக பலரும் கேட்டுக் கொண்டிருக்கும் போது புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றது. அடுத்ததாக வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போனில் மொத்தம் மூன்று மாடல்கள் வெளியாகலாம் என்றும் அதன் பெயர்கள் முறையே S11, S11 ப்ளஸ் மற்றும் S11e என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பெயரிடும் முறையில் எந்தவிதமான மாற்றங்களும் இன்றி தொடர்ந்து சில வருடங்களுக்கு போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறியிருந்தது சாம்சங் நிறுவனம்.
ஆனால் தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 ப்ளஸ், மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா என்ற பெயர்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகலாம் என்றும் பலரும் அறிவித்து வருகின்றனர். எதனால் இந்த பெயர் மாற்றங்கள் என்று இதுவரையிலும் சாம்சங் நிறுவனம் அறிவிக்கவில்லை. ஆனால் இதன் பின்னால் நிச்சயமாக ஒரு கதை இருக்கலாம் என்றும் பலரும் நம்பி வருகின்றனர்.
இதே நேரத்தில் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களும் லீக்காக ஆரம்பித்துள்ளது. எஸ்20 ப்ளஸ் 6.7 இன்ச் அளவுடையது என்றும் அல்ட்ரா 6.9 இன்ச் அளவுடையது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் இருப்பது போன்ற சதுர சட்டகத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றும் நான்கு கேமரா சென்சார்களை இது கொண்டிருக்கும் என்றூம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்ச் ஹோல் டிஸ்பிளேவுடன் கூடிய சிறிய பெசல்கள் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக