சனி, 22 பிப்ரவரி, 2014

சிறந்த மின்கலப் பாவனை உடைய சாதனமாக iPad Air

டேப்லட் சாதனங்களில் அப்பிள் நிறுவனத்தின் iPad Air இன் மின்கலப் பாவனையானது மிகவும் சிறந்ததாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

iPad Air மட்டுமல்லாது Retina திரையுடன் கூடிய iPad Mini, iPad 2 போன்ற அப்பிள் தயாரிப்புக்களும் சிறந்த மின்கலப் பாவனையைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக சார்ச் செய்யப்பட்ட iPad Air ஆனது 658 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடியதாகவும், iPad Mini ஆனது 614 நிமிடங்கள் வரையும், iPad 2 ஆனது 590 நிமிடங்கள் வரையும் மின் சக்திய வழங்கக்கூடியதாக இருப்பதாக அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக