சனி, 22 பிப்ரவரி, 2014

நவீன தொழில்நுட்பத்துடன் HTC அறிமுகப்படுத்தும் M8 Mini ஸ்மார்ட் கைப்பேசி

கைப்பேசி உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள HTC நிறுவனம் M8 Mini எனும் புதிய கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

4.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Quad-Core Snapdragon 400 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 16GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ளதுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளது.

இக்கைப்பேசியானது கூகுளின் Android 4.4.2 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக