சனி, 22 பிப்ரவரி, 2014

மின் புத்தகங்களுக்கான Calibre மென்பொருள் பதிப்பு 1 வெளியானது

நீங்கள் கணினியில் புத்தகங்கள் வாசிப்பவராக இருந்தால், அவற்றை ஒழுங்காக தொகுத்து வைக்கவும் உங்கள் ஐபாட் போன்ற சாதனங்களோடு அவற்றை பகிர்ந்து கொள்ளவும் உதவுகின்ற இலவசமான திறமூல மென்பொருள் Calibre ஆகும். இம்மென்பொருளின் பதிப்பு 1 அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மென்பொருள் வின்டோஸ், மக் மற்றும் லினிக்ஸ் ஆகிய மூன்று இயங்குதளங்களிற்கும் கிடைக்கின்றது.

உங்கள் மின்புத்தகங்களை அழகாக தொகுத்து வைப்பதற்கு மட்டுமல்லாமல், அவற்றை பல பிரிவுகளாக்கி வைத்துக்கொள்ளவும், மின்புத்தகங்களை ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு இலகுவாக மாற்றிக் கொள்ளவும் (உதாரணமாக pdf இலிருந்து epub க்கு), உங்களிடம் உள்ள எந்த கைப்பேசியோ அல்லது ரப்லற் கணினிக்கோ மின்புத்தகங்களை இலகுவாக அனுப்பிக் கொள்ளவும், இந்த புதிய பதிப்பு உதவுகின்றது.

Calibre மென்பொருள் முன்னைய பதிப்பக்களை விட தற்போத வேகமாக இயங்குவதும் குறிப்பிடத்தக்கது.http://calibre-ebook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக