செவ்வாய், 28 ஜனவரி, 2020

தொலைந்து போன போனில் உள்ள டேட்டாகளை எப்படி அழிப்பது?

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை தொலைத்து விட்டால் அதில் உள்ள டேட்டாகளை வேறு யாரும் பயன்படுத்தாதபடி உங்கள் சாதனத்தில் உள்ள விபரங்களை அழிக்க முடியும். அதிமுக்கிய புகைப்படங்கள், வங்கி சார்ந்த தகவல்கள் போன்ற முக்கியமான தகவல்கள் மற்றவர்கள் கையில் கிடைப்பது நல்லதில்லை.


தகவல்களை அழிப்பது எப்படி?
 உங்கள் போனில் உள்ள முக்கியத்தகவல்களை யாரும் பார்க்காதபடியும், பயன்படுத்த முடியாத வகையிலும் பாதுகாக்க பல்வேறு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கின்றன. அவ்வாறு உங்களது அனைத்து தகவல்களையும் பாதுகாக்க நீங்கள் தொலைத்த சாதனத்தை எவ்வாறு லாக் செய்து, அதில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

 'ஃபைன்ட் மை டிவைஸ்' சேவை 
'ஃபைன்ட் மை டிவைஸ்' எனும் அம்சத்தை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள், இந்த சேவையை கொண்டு தான் உங்கள் போனில் உள்ள டேட்டாகளை அழிக்கபோகிறோம். இந்த சேவையை பயனப்டுத்த உங்களது சாதனம் இணையத்துடன் இணைத்திருக்க வேண்டும். உங்களது சாதனம் ஃபைன்ட் மை டிவைஸ் மூலம் கண்டறியப்பட்டால், சாதனம் இருக்கும் இடத்தை பார்க்க முடியும். 

செயல்முறை
 முதலில் என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். உங்களது கூகுள் அக்கவுன்ட்டை லாக்-இன் செய்யுங்கள். இங்கு நீங்கள் பயன்படுத்திய மற்றும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேலை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும். இனி, சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும்.

லாக் மற்றும் சவுண்ட் ஆப்ஷன்
 உங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும். திரையில் Sound, Lock and Erase என்ற இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்.

ஐந்து நிமிடங்களுக்கு சத்தம் எழுப்பும்
இதில் Sound ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும். லாக் ஆப்ஷன் ஒருவேலை Lock ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லாக் செய்யப்பட்டு விடும். இறுதியாக Erase ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்.



உலகின் முதல் 16 ஜிபி ரேம் ஸ்மார்ட் போன்



ஸ்மார்ட்போனை பொருத்தவரை ரேம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆண்ட்ராய்டு வேகத்தை அதிகரிப்பது என்று ஸ்மார்ட் போனின் ரேம் பவர்தான். தற்போதைய காலத்தில் அனைவரும் இன்டர்னெல் மெமரியைவிட ரேம் பவரை வைத்து தான் மொபைல் போன் வாங்குகிறார்கள்.

ரேம் என்பது மிக முக்கியம்
 மொபைல் போன் வாழ்க்கையின் அத்தியவசியம் என்று ஆகியுள்ளது. எனவே அதை பயன்படுத்தும் காலம் என்பது முக்கியம். இப்போதெல்லாம் ஒரே நேரத்தில் பல்வேறு செயலிகளை ஓபன் செய்து வைத்துக் கொண்டு. அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி வருகிறோம். அதற்கு ரேம் பவர் என்பது மிகவும் முக்கியம்.

பிளாக் ஷார்க் 3, 16 ஜிபி ரேம் என தகவல்
சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, வரவிருக்கும் பிளாக் ஷார்க் 3, 16 ஜிபி ரேம் வழங்கும் முதல் ஸ்மார்ட்போன் என தெரிவிக்கப்படுகிறது. அதோடு, இந்த சாதனம் 5 ஜி நெட்வொர்க்கையும் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டில் பெஞ்ச்மார்க் ரேம் 

ஆண்ட்ராய்டில் பெஞ்ச்மார்க் ரேம்
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்மார்ட்போன்கள் 256MB ரேம் வழங்க பயன்படுத்தப்பட்டன. தற்போது, ஒன்பிளஸ் 7 ப்ரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட் 10+ போன்ற உயர்நிலை ஸ்மார்ட்போன்கள் 12 ஜிபி ரேம் வரை வழங்குகிறது, இது தற்போது ஆண்ட்ராய்டில் பெஞ்ச்மார்க் ரேம் என்று கருதப்படுகிறது.


பிளாக் ஷார்க் 3 சாத்தியமான விவரக்குறிப்புகள்
 பிளாக் ஷார்க் 3 ப்ர, பிளாக் ஷார்க் 2 ப்ரோவின் அடுத்தக்கட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த தொலைபேசி 16 ஜிபி ரேம் வழங்கும் என்று தகவல்கள் தெரிவித்தாலும், நிறுவனம் 6/8 ஜிபி ரேம் கொண்ட கூடுதல் வகைகளை குறைந்த விலையில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

16 ஜிபி ரேம் தேவையா?
 இப்போதைக்கு, அந்த நிறுவனம் எல்பிடிடிஆர் 4 அல்லது எல்பிடிடிஆர் 5 ரேம் வகையைப் பயன்படுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் ஸ்னாப்டிராகன் 865 பிந்தைய பதிப்பையும் ஆதரிக்கிறது. ஒரு தொலைபேசியில் எங்களுக்கு 16 ஜிபி ரேம் தேவையா? என்றால் அது அனைத்தும் ஸ்மார்ட்போன் பிராண்டின் செயல்பாட்டைப் பொறுத்தது. சிம்பிள் வேலை: பணியில் இருக்கும் போதே PF பணத்தை எடுக்கலாம்., PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் உள்ளது?

எதிர்கால ஆதாரமாக மாறும் 
இப்போதெல்லாம், ஸ்மார்ட்போனில் உள்ள ரேம் பயன்பாடுகளை கருத்தில் கொள்வது மட்டுமில்லாமல், ரேம் என்பது ஷட்டர் வேகத்திற்கும் கேமராவிற்கான கேச் வேகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. தொலைபேசியில் 16 ஜிபி ரேம் வைத்திருப்பது எதிர்கால ஆதாரமாக மாறும், மேலும் ஒரு பயனர் டஜன் கணக்கான பயன்பாடுகளையும் கேம்களையும் பின்னணியில் திறந்து வைக்க முடியும்.

ஸ்மார்ட்போன் துறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்
 இருப்பினும், இது பேட்டரி ஆயுளைத் தாக்கும், மேலும் இது 16 ஜிபி ரேம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற ஸ்மார்ட்போன் துறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 20 ஜனவரி, 2020

சத்தமில்லாமல் உருவாகும் ஆப்பிள் நிறுவனத்தின் 5G Ipad


ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு 5ஜி ஐபேட் சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஐபேட் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் 2020 ஐபோன் வெளியீட்டு விழாவிலேயே அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.



 இதற்கென ஆப்பிள் நிறுவனம் தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் உபகரணங்களை உருவாக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஐபேட் மாடல்களை அப்டேட் செய்து 5ஜி ஐபேட் மாடலை மட்டும் தாமதமாக வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த ஆண்டின் முதல் அரையாண்டு கால்கட்டத்தில் பின்புறம் 3டி சென்சிங் வசதி கொண்ட புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனம் டைம் ஆஃப் ஃபிளைட் சிஸ்டத்தை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

ஐபோன் எஸ்.இ. 2


முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன் எஸ்.இ.2 மாடலை இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்திற்குள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.


சிறப்பம்சங்களை பொருத்தவரை ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் 4.7 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் இது பார்க்க ஐபோன் 8 போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் ஐபோன் 11 சீரிஸ்களில் வழங்கப்பட்ட ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் டச் ஐ.டி. கைரேகை சென்சார், 3 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம்.

புகைப்படங்களை எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்படலாம். ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போன் சமீபத்தில் 3சி சான்று மற்றும் 5வாட் சார்ஜர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் துவக்க விலை 450 டாலர்கள்

சனி, 11 ஜனவரி, 2020

64 எம்.பி., 5 கேமராக்கள்... ஹூவாய் P40 ப்ரோ

Huawei P40 Pro to feature 64MP penta camera setup : வருகின்ற மார்ச் மாதத்தில் ஹூவாய் நிறுவனத்தின் பி40 மற்றும் பி40 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வெளியாக உள்ளது.இதில் பி40 ப்ரோ ஐந்து கேமராக்களை கொண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சதுர கேமரா மோட்யூலில் 5 கேமராக்கள் பொருத்தப்பட்டு வெளியாகும் என்று ஐ.டி.ஹோம் ரிபோர்ட் அறிவித்துள்ளது.
இந்த ஐந்து கேமராக்களில் 64 எம்.பி. சோனி IMX686 கேமராவும், 20 எம்.பி. அல்ட்ரா வைட் சென்சார் கேமராவும், 12 எம்.பி. பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும், மேக்ரோ மற்றும் 3டி டி.ஒ.எஃப் சென்சாரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.  நாட்ச் டிஸ்பிளேவுடன் இதன் டிஸ்பிளே வெளியாகலாம் என்று எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்ற நிலையில் முன்பக்க கேமரா குறித்த எந்த விதமான அப்டேட்டும் கிடைக்கவில்லை.
மிங் சி கௌ அறிவிப்பின்படி இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 100,000.Rs முதல் 150,000.Rs  வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கிரின் 990 5ஜி ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்படலாம் என்றும் செய்திகள் கிடைத்துள்ளது.

144 மெகா பிக்சல்கள் கொண்ட கேமரா சென்சார்... அறிமுகம் செய்ய காத்திருக்கும் சாம்சங்!


Samsung 144MP camera sensors :  ஏற்கனவே 108 எம்.பி. செயல்திறன் கொண்ட கேமராக்கள் வரை செல்போன்களில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் 144 எம்.பி செயல்திறன் கொண்ட கேமராவை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிப்ஸ்டெர் சமீபத்தில் வெளியிட்ட ட்வீட்டில் 144 எம்.பி. செயல்திறன் கொண்ட சென்சார்களை உருவாக்கி வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

14 நானோ மீட்டர் டெக்னாலஜி மூலம் தான் 100 எம்.பிக்கு மேலான செயல்திறன் கொண்ட சென்சார்களை உருவாக்கிட இயலும்.  ஃபின் எஃப்.ஈ.டி தொழில்நுட்ப உதவியுடன் இந்த சென்சார் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வர உள்ளாது. தற்போது மார்க்கெட்டில் இருக்கும் சென்சார்கள் அனைத்தும் சி.மாஸ் இமேஜ் சென்சார்கள் ஆகும்.
ஆரம்பத்தில் 48 எம்.பி. கேமரா வெளியானது தான். அந்த ஐடியா அதோடு நின்றுவிடாமல் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து அளவுக்கு அதிகமான மெகா பிக்சல்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.  ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் , ரெட்மீ கே30 மற்றும் ரியல்மீ எக்ஸ்2 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களில் 64 எம்.பி. கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. 108 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் தங்களுடைய கேலக்ஸி 11 சீரிஸில் அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.