வியாழன், 2 ஜனவரி, 2020

48 மெகாபிக்சல் கேமராவுடன் Oppo F15!

ஹைலைட்ஸ்
  • Oppo F15, “high-quality” படங்களைப் பிடிக்கப் பயன்படுகிறது
  • VOOC Flash Charge 3.0 ஆதரவை ஓப்போ உறுதிப்படுத்தியுள்ளது
  • F11 Pro & F9 Pro-க்காக மேம்படுத்தலாக Oppo F15 வரும்

  • Oppo F15 ஜனவரி 16-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று நிறுவனம் அமேசானில் ஒரு டீஸரில் தெரிவித்துள்ளது. ஓப்போ தனது அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, மேலும் சில தகவல்களை வெளியிடுவதன் மூலம் புதிய மாடலுக்கு சில ஹைப்களை உருவாக்கும் தந்திரத்தை தொடர்ந்தது. Oppo F11 Pro மற்றும் Oppo F9 Pro-வின் மேம்படுத்தலாக அறிமுகமாகும் புதிய ஓப்போ போன், குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வரும். இது VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் என்று சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. 

  • Oppo F15-ன் விவரக்குறிப்புகள்:
    புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Oppo F15 செயற்கை நுண்ணறிவு (AI) ஆதரவுடன் 48-megapixel primary shooter உள்ளது. குவாட் ரியர் கேமரா அமைப்பின் ஒரு பகுதியாக முதன்மை சென்சார் இருக்கும், இது “high-quality pictures” எடுப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், அமைப்பில் மற்ற சென்சார்களின் மெகாபிக்சல் எண்ணிக்கையை Oppo குறிப்பிடவில்லை.
  • VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 க்கு நன்றி, Oppo F15 நுகர்வோருக்கு ஐந்து நிமிட சார்ஜில் இரண்டு மணிநேர பேச்சு நேரத்தை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் in-display fingerprint 3.0 சென்சாருடன் வரும். இது பயனர்கள் திரையை 0.32 வினாடிகளில் திறக்க அனுமதிக்கும் மற்றும் உயர் தர பாதுகாப்பை இயக்கும்.
    7.9mm தடிமன் மற்றும் 172 கிராம் எடையுடன் கூடிய F15-ன் குறைந்தபட்ச வடிவமைப்பையும் ஓப்போ கிண்டல் செய்கிறது. ஸ்மார்ட்போன் பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட உடலுடன் லேசர் ஒளி பிரதிபலிப்பு பின்புற கவரையும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஓப்போ பகிர்ந்த ஒரு படம் போனில் குறைந்தது 8GB RAM இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
  • கடந்த வாரம், இந்தியாவில் F15 அறிமுகப்படுத்தப்படவிருப்பதை ஓப்போ வெளிப்படுத்தியது. நிறுவனம் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்ட ஒரு படம் மூலம், ஸ்மார்ட்போனின் மெட்டல் கட்டமைப்பையும் சுட்டிக்காட்டியது. இந்த போன் ஜனவரி 16-ஆம் தேதி நாட்டில் அறிமுகம் செய்ய கிண்டல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சமீபத்திய F-சீரிஸ் போனின் டிஸ்பிளே அளவு மற்றும் தெளிவுத்திறன் மற்றும் பிராசசர் உள்ளிட்ட விரிவான விவரக்குறிப்புகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக