ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

நவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy Camera 2

சம்சுங் நிறுவனம் 16.3 மெகாபிக்சல்களைக் கொண்ட கமெராவினை அறிமுகம் செய்துள்ளது.
2014ம் ஆண்டிற்கான இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ள Galaxy Camera 2 எனும் கமெரா கூகுளின் அன்ரோயிட் 4.3 ஜெல்லிபீன் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதாக காணப்படுகின்றது.

மேலும் 23mm விரிந்த கோணம் உடைய வில்லை, 21x ஒப்டிக்கள் ஸும், என்பனவற்றுடன் 4.8 அங்குல அளவுடைய திரை, 8 GB சேமிப்பு நினவகமும் தரப்பட்டுள்ளது.

அத்துடன் microSD கார்ட்டின் உதவியுடன் சேமிப்பு நினைவகத்தினை 64GB வரை அதிகரிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக