தற்போது தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுவரும் கைப்பேசிகளில் பல்வேறு தொழில்நுட்பப் புரட்சிகள் மேற்கொள்ப்பட்டே வருகின்றன.
அவற்றின் வரிசையில் உலகிலேயே மிகவும் மெலிதான ஸ்மார்ட் கைப்பேசியினை முன்னணி நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.
5.5 mm தடிப்புடைய Gionee Elfie S5.5 எனும் இக்கைப்பேசியானது 5 அங்குல அளவுடைய தொடுதிரை, Quad Core 1.7GHz Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் அன்ரோயிட்டினை அடிப்படையாகக் கொண்ட Amigo இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசி 13 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, மற்றும் 5 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இதன் பெறுமதியானது 370 டொலர்களாகும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக